ஓடிக் கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து...

வெள்ளி, 7 ஜூலை 2023 (14:02 IST)
ஹவுராவில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷாவில் கடந்த மாதம்  2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  293  பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று  ஹவுராவில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி, தெலங்கானாவின் பகிடிப் பள்ளி அருகே திடீரென்று தீப்பிடித்தது.

உடனே லோகோ பைலட் ரயிலை நிறுத்தி பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தால் பயணிகள்  அவசரமாக ரயில் பெட்டிகளிலிருந்து கீழிறங்கியதால் உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்