குஜராத் மாநிலத்தில் அணுகுண்டு வைக்கத் திட்டம்:யாசின் பட்கல் மீது வழக்குப் பதிவு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (21:04 IST)
குஜராத் மாநிலத்தில் அணுகுண்டு வைக்கத் திட்டமிட்ட  இந்திய முஜாகிதீன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மீது வழக்குப் பதிவு செய்ய என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முஜாகிதீன் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சிலர் சுஜராத் மா நிலத்தில் உள்ள சூரத் நகரில் முஸ்லிம்களை  வெளியேற்றிவிட்டு, அணுகுண்டு ஒன்றை நகரில் வைத்து வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாக என்.ஐ.ஏ  நீதிமன்றத்தில் கூறியது.

இதையடுத்து, பயங்கரவாத செயல்களை செய்ய , பிற குற்றவாளிகளுடன் பட்கல் தொடர்பு கொண்டு, நேபாளத்தில் உள்ள  மாவோயிஸ்டுகளின் உதவுடன் ஆயுதங்களுடன் வெடிப்பொருட்களைச் சேகரித்து, பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, இந்திய முஜாகிதீன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகள்  மீது வழக்குப் பதிவு செய்ய என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்