சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்றும், தேவைப்பட்டால் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கப்பட்டும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக, எம்பி பதவியையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முதலமைச்சர் கமல்நாத் அவர்களுக்கு மத்தியபிரதேச ஆளுனர் எழுதிய கடிதத்தில் இன்றுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், தனது தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதாகவும் அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்றும், தேவைப்பட்டால் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது