பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவு: கமல்நாத் அரசு தப்பிக்குமா?

திங்கள், 16 மார்ச் 2020 (07:35 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஜோதிராதித்யா சிந்தியா போர்க்கொடி தூக்கியதால் அவரது ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதில் 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா மட்டும் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மீதி 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும் இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று நள்ளிரவு திடீரென இன்று சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக முதல் அமைச்சர் கமல்நாத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் 
 
இதனையடுத்து இன்று பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் கமல்நாத் நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 115 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதில் 22 பேர் ராஜினாமா செய்துவிட்டதால் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆக இருப்பதை அடுத்து மெஜாரிட்டிக்கு தேவையான 112 எம்எல்ஏக்களை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு 107 எம்எல்ஏ க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்