நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் நடத்த தடை!

வெள்ளி, 15 ஜூலை 2022 (12:57 IST)
நாடாளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த விதமான போராட்டம் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18 முதல் நடைபெற உள்ளது என்பதும் இந்தக் கூட்டத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டம் ஜூலை 17ஆம் தேதி கூட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் சில சமயம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள்தான் தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த போராட்டமும் நடத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதும் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும் எதிர்ப்பு காரணமாக வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்