புதுச்சேரி மாநிலத்தில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியனில், முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் , பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் முக்கிய வணிகப் பகுதியான நேரு வீதியில் நிறைய வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உருவாகி வரும் நிலையில், அந்த நிறுவனங்கள் மற்றும் கடை ஊழியர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி வருகின்றனர்.
தற்போது தீபாவளியையொட்டி மக்கள் பலரும் கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி வருவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வுகாணும் வகையில், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், மக்கள் சாலையில் தங்கள் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில், பழைய சிறைச்சாலையில் வாகனங்களை ரூ.100 கட்டணம் செலுத்திப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.