டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றார். 2023 பிப்ரவரி முதல் தற்போது வரை 9ஆவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது என்றும் அவர் தெரிவித்தார்.
2024-25க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆகவும், Q1 இல் 7.1% ஆகவும், Q2 இல் 7.2% ஆகவும், Q3 இல் 7.3% ஆகவும், Q4 இல் 7.2% ஆகவும் இருக்கும் என்றும் 2025-26 ஆம் ஆண்டின் Q1 க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.