வருங்காலத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வேறு கூட்டணிக்கு மாறலாம் என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில் நிதிஷ்கார், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவை விட்டு இனி எங்கும் செல்லப் போவதில்லை என்றும் கூட்டணி மாறும்போது நானாக மாறவில்லை என்றும் எனது கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் தான் என்னை மாற வைத்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.