குஜராத் புதிய முதல்வர் நிதின்பாய் பட்டேல்?

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (13:19 IST)
குஜராத் முதல்வராக இருந்த அனந்திபென் பட்டேல் முதுமை காரணமாக ராஜினாமா செய்ததையடுத்து அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் நிதின்பாய் பட்டேலின் பெயர் அடுத்த முதல்வராக அடிபடுகிறது.


 
 
அனந்திபென் படேல் 75 வயது அடைவதையொட்டி, கட்சியின் வழக்கமான நடைமுறையை பின்பற்றி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
 
தற்போது குஜராத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள நிதின்பாய் பட்டேல் புதிய முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நிதின் பாய் படேல் 2012-ஆம் ஆண்டு மெஹ்ஷனா தொகுதியில் இருந்து வெற்றிபெற்றவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்