வெளிநாடு தப்பிச்சென்ற நித்யானந்தா ? – போலீஸார் தகவல் !

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:21 IST)
சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளிநாட்ட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது குழந்தைகளை நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்தனன் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆசிரமத்தைச் சேர்ந்த சாத்வி பிரன்பிரியானந்தா மற்றும் பிரியாதத்வ ரிதி கிரண் ஆகிய இருவருக்கும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக பேசியுள்ள எஸ்.பி அசாரி ‘நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார். அவரைத் தேவைப்பட்டால் கைது செய்து விசாரிப்போம். அவராக இந்தியா திரும்பினாலும் கைது செய்வோம்’ எனத்தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த நாட்டிக்கு சென்றிருக்கிறார் என்பது பற்றி எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்