உச்சத்தை தொடும் கொரோனா - விஞ்ஞானி கணிப்பு!

சனி, 3 ஏப்ரல் 2021 (10:32 IST)
தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை இன்னும் இரு வாரங்களில் உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானி கணிப்பு. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.  
 
அந்த வகையில், புதிதாக 89,129 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,23,92,260 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 714 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,64,110 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில்  44,202 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் கான்பூர் ஐஐடி-யைச் சேர்ந்த மணீந்தர் அகர்வால் என்ற விஞ்ஞானி கணிதவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை இன்னும் இரு வாரங்களில் அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதிக்குள் உச்சத்தை தொடும் என்றும் இது பின்னர் படிப்படியாக குறைந்து அடுத்த மாத இறுதி வாக்கில் குறைந்த எண்ணிக்கையை தொடும் என்றும் மணீந்தர் அகர்வால் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்