சமீபத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் சோதனை நடத்தி வரும் என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை இதுவரை 100க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ அமைப்பு உறுப்பினர்களை கைது செய்துள்ளது. இந்த ரெய்டு மற்றும் கைது சம்பவங்களை எதிர்த்து பி.எப்.ஐ தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.