நாளை மறுநாள் முதல் பாராளுமன்ற தேர்தல் தொடங்க இருப்பதை அடுத்து இறுதி கட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நியூஸ் எக்ஸ் மற்றும் டி டைனமிக்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக தான் ஆட்சியில் வரும் என்றும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பாஜகவை வீழ்த்தும் என்று நம்பப்படும் இந்தியா கூட்டணி வெறும் 109 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி இந்த முறை ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் திமுக உட்பட அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் தான் உட்கார வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது