பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டு விரைவில்!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (16:08 IST)
விரைவில் புதிய 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 
 
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதும் சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை போக்க பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 50 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
 
புதிய 50, 20 ரூபாய் நோட்டுகள் வெளிவந்தாலும், பழைய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்