ஆந்திராவில் நடிகை ரோஜா உள்பட 14 அமைச்சர்கள்: இன்று பதவியேற்பு

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:00 IST)
ஆந்திராவில் நடிகை ரோஜா உள்பட 14 அமைச்சர்கள் இன்று பதவியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி கலைக்கப்பட்ட நிலையில் அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர் 
 
இந்த நிலையில் 25 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்ததாக தகவல் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது ஆளுநர் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து இன்று நடைபெறும் விழாவில் 14 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த 25 அமைச்சர்களில் 11 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர் என்பதால் அவர்கள் பதவி ஏற்க வேண்டிய அவசியமில்லை 
 
இன்று பதவியேற்கும் புதிய அமைச்சர்களின் நடிகை ரோஜாவும் இடம் பெற்றுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்