பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

Siva

வியாழன், 24 ஏப்ரல் 2025 (15:09 IST)
கடந்த 1960 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுத்தார். ஆனால் தற்போது, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்தி உள்ளார் என பாஜக எம்.பி. நிஷாந்த் துபே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை முன்னாள் பிரதமர் நேரு கடந்த 1960 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறுவதற்காகவே செய்தார். சிந்து, ரவி, பியாஸ் ஆகிய நதிகளில் இருந்து தண்ணீரை கொடுத்து, இந்தியர்களின் ரத்தத்தை சிந்தினார்,” என்று தெரிவித்துள்ளார்.
 
“ஆனால் இன்று மோடிஜி உணவும், தண்ணீரையும் நிறுத்தி விட்டார். பாகிஸ்தானியர்கள் இனி தண்ணீர் இல்லாமல் இறந்து விடுவார்கள். நாங்கள் பாஜக ஊழியர்கள், பாகிஸ்தானியர்களை சித்ரவதை செய்து பின்னர் அவர்களை கொல்வோம்,” எனவும் அவர் கூறியுள்ளார்.
 
முன்னதாக, தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்