கடும் எதிர்ப்பு எதிரொலி: தமிழகத்தில் முதுநிலை நீட் தேர்வுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு..!

Siva

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (08:53 IST)
முதுநிலை நீட் தேர்வுக்கு தமிழகத்தில் மையம் ஒதுக்கப்படவில்லை என்று கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதுநிலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு நீட் பிஜி தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வுகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை மாலை என இரண்டு வேலையாக நடைபெற உள்ளது என்பது தெரிந்தது.

நாடு முழுவதும் 259 நகரங்களில் நடைபெற இருக்கும் இந்த தேர்வு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தேர்வுகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன என்பதும் 500 முதல் 1000 கிலோமீட்டர் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்வு எழுதுபவர்கள் கேட்ட தேர்வு மையங்கள் தமிழகத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவர் அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் மின்னஞ்சல் மூலம் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்