நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு! எந்த இணையத்தளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது?

Mahendran

வியாழன், 2 மே 2024 (13:47 IST)
2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பது பார்ப்போம். 
 
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கு மே ஐந்தாம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் மே இரண்டாம் தேதி இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைப்பு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதளத்தை கிளிக் செய்து பெயர், பிறந்த தேதி, விண்ணப்பதாரர்கள் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்