தேர்தலில் வாக்களித்தால் தேர்வு எழுத தடையா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

Mahendran

புதன், 10 ஏப்ரல் 2024 (11:31 IST)
தேர்தலில் வாக்களிப்பதால் விரலில் வைக்கப்படும் மை காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்ற வதந்தி பரவி வரும் நிலையில் இது குறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது

கடந்த சில நாட்களாக தேர்தலில் வாக்களிக்கும் போது விரலில் வைக்கப்படும் மை காரணமாக முக்கிய தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படாது என்ற தகவல் தவறானது என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது

நீட் தேர்வு உட்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் விரலில் மை இருக்கக்கூடாது என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் விரலில் மையுடன் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு மையங்களில் நுழைய தடை விதிக்கப்படும் என்ற தகவல் உண்மைக்கு மாறானது என்றும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல்கள் குறித்து புகார் செய்ய இருப்பதாகவும் அடிப்படை ஆதாரமற்ற இந்த செய்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது

மேலும் தேர்வு எழுதுபவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்றும் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் படிப்பிலும் காணும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை  தெரிவித்துள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்