வந்தேறிகளை பற்றி தகவல் அளித்தால் சன்மானம்: மும்பை போஸ்டரால் பரபரப்பு!

வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:12 IST)
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பற்றி தகவல் அளித்தால் சன்மானம் என நவநிர்மாண் சேனா ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியதை தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தால் 38 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதிலுமே பதட்ட நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சியினர் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்து இந்தியாவுக்குள் ஊடுருவி வாழ்ந்து வருபவர்கள் பற்றி தகவல் அளித்தால் 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டம் யாரையும் வெளியேற்றாது என்று மத்திய அமைச்சர்கள் கூறியுள்ள நிலையில் இதுபோன்ற கட்சிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த மாதத்தில் இதே கட்சியினர் பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் தானாக வெளியேறிவிட வேண்டும் என போஸ்டர் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்