இந்தியாவில் 8 கட்சிகள் தேசிய கட்சிகளாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன்சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய இந்த 8 தேசிய கட்சிகளும் ஆண்டுதோறும் தங்கள் நிதி வசூல் மற்றும் வருமானம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
அவ்வாறாக 2021 – 2022ம் ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற வருமானம் மொத்தமாக ரூ.3,289.34 கோடி ஆகும். இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சி மட்டும் ரூ.1917.12 கோடி ஈட்டியுள்ளது. இந்த தொகையில் இருந்து ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டில் அதிகம் நிதி சேகரித்த கட்சியில் முதல் இடத்தில் பாஜக உள்ளது.