கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு சம்பவங்கள்! – அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!

வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:40 IST)
தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த பல்வேறு குற்றங்கள் குறித்த விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவர அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 31,677 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு சம்பவங்கள் வீதம் பதிவாகியுள்ளது. அதிகமாக வன்கொடுமை நடந்த மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. அங்கு ஒரு வருடத்தில் மட்டும் 6,337 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 2,947 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 2,496 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 2,845 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதுபோல பெண்களுக்கு எதிரான கொலை, வரதட்சணை கொடுமை, ஆசிட் வீசுதல், தற்கொலை சம்பவங்கள், ஆள் கடத்தல் என மொத்தமாக 4,28,278 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் சைபர் க்ரைம் குற்றங்களும் கடந்த முந்தைய ஆண்டை விட 5% அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்