கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தின் போஸ்டரை ரிலீஸ் செய்து உறுதி செய்தது.
.இந்நிலையில் நடிகர் விவேக் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில், அவருக்குப் பதில் குரு சோமசுந்தரம் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், இந்தியன் முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு சில மாதங்களுக்கு முன் காலமானார். அவர் கதாப்பாத்திரத்தில் நடிக்க நந்து பொதுவால் நடிக்கவுள்ளார்.