நேற்று அதிகாலை 4 மணிக்கு பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தை சுற்றி மர்ம ட்ரோன் பறந்ததாகவும், சுமார் 100 அடி உயரத்தில் பறந்த அந்த ட்ரோன் கோயிலை வட்டம் அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மீறி ட்ரோன் பறந்தது. இதற்கு யார் காரணம் என்ற என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாட்டு இந்தியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதில் கலந்து கொள்ள உள்ள நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.