இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

Prasanth Karthick

திங்கள், 6 ஜனவரி 2025 (11:33 IST)

சீனாவில் வேகமாக பரவி வரும் HMPV வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியான நிலையில், ஊரடங்கால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவில் புதிதாக HMPV என்ற வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவை போல இந்த வைரஸ்க்கும் தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சீனாவில் ஏராளமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் HMPV வைரஸின் முதல் பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கர்நாடக மாநில சுகாதாரத்துறையும் உறுதி செய்துள்ள நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலிருந்து குழந்தையை எங்கும் கொண்டு செல்லாத நிலையில் எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

இந்த வைரஸ்க்கு அறிகுறியாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகியவை கூறப்படும் நிலையில் பலரும் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களை சோதித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்