சிஏஏ போராட்டம்: ஆம் ஆத்மி கவுன்சிலர் கைதால் பரபரப்பு

வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:04 IST)
சிஏஏ போராட்டம்: ஆம் ஆத்மி கவுன்சிலர் கைதால் பரபரப்பு
சிஐஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீரென கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிர்ர்ஏ சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாளர்களுக்கும் நடைபெற்ற மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் சுமார் 38 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த வன்முறைக்கு காரணம் காங்கிரஸ் தான் என்று பாஜகவும் பாஜகதான் என்று காங்கிரஸ் கட்சியும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த போராட்டத்தின் வன்முறைக்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களும் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
 
ஆம் ஆத்மியை சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில்தான் கற்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த பலர் கற்களால் போராட்டக்காரர்கள் மீது வீசியதால் தான் இந்த கலவரமே உண்டானது என்று குற்றம் சாட்டப்பட்டது கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தாஹிர் உசேன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
தாஹிர் உசேன் வீடு அருகே உள்ள கால்வாயில் ஒரு பிணம் கண்டெடுக்கப்பட்டது என்றும், அந்த கொலைக்கு தாஹிர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது தாஹிர் உசேன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்து இருந்தால் அவர்களுக்கு இரட்டை தண்டனை வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்