மும்பை- கோவா இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

திங்கள், 26 ஜூன் 2023 (12:14 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வந்து பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் மும்பை மற்றும் கோவா இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் மோடி தொடங்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மும்பையிலிருந்து காந்திநகர் சோலாப்பூர் சீரடி இடையே ஏற்கனவே வந்த பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நாளை முதல் கோவாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இயக்கி வைக்க உள்ளார். 
 
மும்பை கோவா இடையிலான வந்தே பாரதிரியில் சுற்றுலா பயணிகளுக்கு கணிசமாக பயன் அளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் நாங்கள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மும்பையில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 3:30 மணி அளவில் கோவா சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கமாக கோவாவில் இருந்து 12.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 10:25 மணிக்கு மும்பை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ரயில் செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் கூறப்பட உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்