ரூ.3,80,700 கோடி சொத்து; எட்டாத உயரத்தில் முகேஷ் அம்பானி!!

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (12:12 IST)
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 8 வது முறையாக இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 
 
ஐஐஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா (IIFL Wealth Hurun India) மேற்கொண்ட ஆய்வின் படி முகேஷ் அம்பானி 8 வது முறையாக இந்திய பணக்கார்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
முதல் இடத்தில் முகேஷ் அம்பானியும், இரண்டாவது இடத்தில் இந்துஜா சகோதர்களும், மூன்றாவது இடத்தில் விப்ரோ நிறுவனம் அஸிம் பிரேம்ஜியும், நான்காவது இடத்தில் எல்.என்.மிட்டலும், ஐந்தாவது இடத்தில் கவுதம் அதானியும் உள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு பின்வருமாறு... 
  1. முகேஷ் அம்பானி -  ரூ.3,80,700 கோடி 
  2. இந்துஜா சகோதர்கள் - ரூ.1,86,500 கோடி
  3. அஸிம் பிரேம்ஜி - ரூ.1,17,100 கோடி
  4. எல்.என்.மிட்டல் - ரூ.1,01,300 கோடி
  5. கவுதம் அதானி -  ரூ.94,500 கோடி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்