மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஹரியானா எம்பி பிரிஜேந்திர சிங், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி பாஜக எம்பியாக பிரிஜேந்திர சிங் இருந்து வந்தார். இவர் தனது எம்பி பதவி ராஜினாமா செய்வதாக ட்விட்டர் என்று அழைக்கப்படும் சமூக ஊடக தளமான X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனக்கு ஹிசார் எம்.பி.யாக பணியாற்ற வாய்ப்பளித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்றும் பிரிஜேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய பிஜேந்திர சிங், மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்களான அஜய் மக்கன், முகுல் வாஸ்னிக் மற்றும் தீபக் பபாரியா ஆகியோர் உடன் இருந்தனர்.