இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியரே இல்லை என்றும் அந்த மாணவர்களுக்கு கணித பாடப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் தான் பாடம் எடுத்ததாகவும் அதனால் தான் அனைத்து மாணவர்களும் பெயில் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.