கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இருவருமே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்கள். இந்நிலையில் கேரளாவின் தேக்கடிப் பகுதியில் நிலம் வாங்குவது தொடர்பாக பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத்தின் தாயார் ஷோபனா ஆகியோர் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நிலம் வாங்குவது தொடர்பாக ஜீவாவுக்கும் பிரமோத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும் மூவருமே அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகப்பட்டு லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கதவை திறந்து பார்த்தபோது மனைவி கட்டிலில் சடலமாகவும், பிரமோத்தும் அவரது தாயாரும் தூக்கில் தொங்கியபடியும் சடலமாகக் கிடந்துள்ளனர்.