ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்-ல் எவ்வளவு பணம் எடுக்கலாம் தெரியுமா?

சனி, 31 டிசம்பர் 2016 (11:22 IST)
ஜனவரி 1 முதல் ஏ.டி.எம் மையங்களில் பொதுமக்கள் ரூ.4,500 எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மக்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என  பிரதமர்மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
 
அதேபோல், பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டது. ஏ.டி.எம் மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,500 எடுத்துக் கொள்ளலாம் எனவும், வங்கிகளில் நேரிடையாக பணம் எடுப்பவர்கள், வாரத்திற்கு ரூ.4,500 எடுத்துக் கொள்ளாலம் எனக்கூறப்பட்டது.
 
ஆனாலும் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் 100 மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாததால், மக்கள் ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தட்டுபாடுகளை தவிர்ப்பதற்காக புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில், நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம் மையங்களில் பொதுமக்கள் ரூ.4, 500 எடுத்துக் கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகளில் நேரடியாக சென்று பணம் எடுக்கும் போது வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுபாடு அப்படியே தொடர்கிறது என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்