அனைத்து மொழிகளிலும் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதும் பிரதமர் மோடி

வெள்ளி, 29 மே 2020 (19:29 IST)
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நான்கு கட்டமாக ஊரடங்கு உத்தரவுகள் படிப்படியாக பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நான்காவது கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது
 
இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய மாநில அரசுகளிடம் இருந்து நாளை அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதயிருப்பதாகவும் இந்த கடிதம் இந்தியாவில் உள்ள தமிழ் மொழி உள்பட அனைத்து மொழிகளிலும் வெளிவரும் என்றும் நாளை அனைத்து ஊடகங்களிலும் இந்த கடிதம் வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கடிதத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு மற்றும் தளர்வான குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்