வந்தவாசியை அடுத்து உள்ள தாழம்பள்ளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சாதிக்பாட்சா. இவரின் மகன் உசேன்(25), நேற்று இரவு வந்தவாசியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் ஒரு வளைவில் திடீரென திரும்பியது. இதனால், பின்னால் வந்த உசேன் அந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உசேனை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.