சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.நாட்டில் இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று மாலை பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்று தனது அலுவலகத்தில் பணியைத் தொடங்கிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து பாதுகாப்புப்படை மற்றும் காவல் துறை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளார்.