பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் மனு.. பெரும் பரபரப்பு..!

Siva

புதன், 29 மே 2024 (20:10 IST)
பிரதமர் மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
குமரி கடல் முழுவதும் கடலோர காவல் படை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே பிரதமர் மோடி நாளை தியானம் செய்ய இருப்பதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் இது தேர்தல் விதிமுறைகளை மீறியது என்று கூறி வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என்று அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்