விளம்பரத்துக்காக மட்டும் ரூ. 1,100 கோடி செலவு செய்துள்ள மோடி - இரண்டு மங்கள்யானுக்கு சமம்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (13:38 IST)
பிரதமராக மோடி பதவியேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் ஆயிரத்து நூறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக அறியப்பட்டுள்ளது.


 

ராம்வீர் சிங் என்ற சமூக ஆர்வலர் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார். இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல், 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில் ரூ. 1,100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நாளொன்றுக்கு சுமார் 1.4 கோடி ருபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலவானது இந்திய செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் செயற்கைகோள் போன்று இரண்டு செயற்கைகோள்களை தயார் செய்யும் செலவுக்கு சமமானது.

ஒரு மங்கள்யான் செயற்கைகோள் செய்யும் செலவு வெறும் 450 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மங்கள்யான் செயற்கைகோள்தான் உலகிலேயே மிகக்குறைந்த செலவில் தயாரான செயற்கைகோள் ஆகும்.

இந்த செலவுகள் வெறும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய மின்னணு ஊடகங்களுக்கு மட்டுமே ஆகும். மற்றபடி, செய்திதாள்கள், விளம்பர தட்டிகள், போஸ்டர்கள் மற்றும் காலண்டர்களுக்கு செலவிடப்பட்ட தொகைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.
அடுத்த கட்டுரையில்