எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது என்று உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்பார் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நானும் அகிலேஷ் யாதவும்,இந்தியா கூட்டணியும் நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து வேலைகளையும் செய்து வைத்திருக்கிறோம். எனவே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மோடி நாட்டின் பிரதமராக முடியாது என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி கடந்து 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார், அப்போதெல்லாம் அவர் அதானி, அம்பானி குறித்து பேசவில்லை. ஆனால் இப்போது திடீரென அவர் தனது இரண்டு நண்பர்களின் பெயரை அடிக்கடி பேசி வருகிறார் இதிலிருந்து அவர் பயந்துவிட்டார் என்று தெரிகிறது.
மோடி தலைமையிலான அரசு 22 தனிநபர்களின் 16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அவர் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கினால் நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்கும் என்றும் ராகுல் காந்தி பேசினார்.