தாஜ்மஹாலுக்குள் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் மாடல் அழிகள் முக்காடு போட்டுச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
2017ஆம் ஆண்டுக்கான சூப்பர் மாடல் உலக அழகிப்போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 34 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற வெளிநாட்டு அழகிகள் ஆக்ராவில் இருக்கும் சர்வதேச புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றனர்.
ஆக்ரவில் வெயில் காரணமாக அவர்கள் முகத்தை துணியால் மூடியவாறு தாஜ்மஹாலுக்குள் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களை முக்காடை எடுத்துவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படையினர் கூறியதாவது;-
புராதன சின்னங்கள், தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட இடங்களில் மதம் சம்பந்தமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே முக்காடு அணிந்து செல்ல மறுக்கப்பட்டது, என்றனர்.
இந்த் செய்தி மத்திய கலாச்சார துறை மந்திரி மகேஷ் சர்மா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:-
தாஜ்மஹாலுக்குள் செல்ல எந்த ஆடை கட்டுப்பாடும் கிடையாது. எந்த கலர் உடை வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். இது தொடர்பாக எந்த வழி காட்டுதலும் இல்லை. எனவே முக்காடு அணிந்து சென்றவர்களை தடுத்து நிறுத்தியது குறித்து விசாரணை நடத்தப்படும், என்றார்.