ராகுல் காந்தி ‘கிளப்’பில் இணைய தலைமறைவானேன் - கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வின் பதிலடி

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (17:42 IST)
ராகுல் காந்தி ‘கிளப்’பில் இணைய தலைமறைவானேன் என்று நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
 

 
கொல்லம் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் முகேஷ். பிரபல சினிமா நடிகரான இவரை காணவில்லை என்று, அத்தொகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
 
முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட முகேஷ் கலந்து கொள்ளவில்லை என்றும், எனவே, அவரை உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ள அவர்கள், தங்களின் புகாருக்கான ரசீதையும் காவல் நிலையத்திலிருந்து பெற்றுள்ளனர்.
 
இந்நிலையில், தன்னைக் காணவில்லை என்ற இளைஞர் காங்கிரசாரின் புகார் பற்றி கருத்து தெரிவித்துள்ள முகேஷ், ”ராகுல் காந்தியின் (திடீரென காணாமல் போகும்) கிளப்பில் உறுப்பினர் ஆவதற்காக நான் சென்றிருந்த வேளையில், என்னை காணவில்லை என்று இளைஞர் காங்கிரசார் இப்படி புகார் அளித்துள்ளார்கள்” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்