ஜூன் 23ம் தேதி மாலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வயலில் காய்கறிகள் பறித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் சிறுமியை வலுக்காட்டாயமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பம் ஊர்ப்பஞ்சாயத்தில் புகார் அளிக்க, அவர்களோ சிறுமிக்கு இளைஞரின் குடும்பம் 50000 நிதியுதவி அளிக்கவேண்டும் என்றும் சிறுமி வேண்டுமானால் இளைஞரை 5 முறை செருப்பால் அடித்துக் கொள்ளலாம் என்றும், அத்தோடு இளைஞரை விட்டுவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால் இதை ஏற்காத சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பியுள்ளனர். மருத்துவ அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.