ரூ.4 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதன், 30 ஜூன் 2021 (22:19 IST)
கொரொனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பதை தேசியப் பேரியர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அரசு தீர்மானிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரொனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க வேண்டுமென்ற நேரடி உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பதை தேசியப் பேரியர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அரசு தீர்மானிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.