முடியும் தருவாயில் வடிவேலு பஞ்சாயத்து… விரைவில் வருவார் நகைச்சுவை மன்னன்!

புதன், 16 ஜூன் 2021 (12:03 IST)
நடிகர் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டை நீக்கும் பணிகளில் முக்கியத் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். மேலும் இந்த பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்பட்டு வடிவேலு வரிசையாக படங்களில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்