டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.
இவரது அமைச்சரவையில், ஊழல் நடந்ததாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சர் சத்தியேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபி ஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, பணமோசடி வழக்கில் சசத்தியேந்தார் ஜெயினுடன் இருவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, திகார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையில் உள்ள சத்தியேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோவை பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேஷாத் வெளியிட்டிருந்தார், இது வைரலாகி விமர்சனங்கள் எழுந்து வருகிறது.