மஹாராஷ்டிரத்தில் இருந்து டெல்லியில் குடியேறி வசிதிது வந்த யூடியூபர் அஃப்தாப் தன் காதலி ஷ்ரத்தாவுடன் லிவ்இன் முறையில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு இடையே சண்டை ஏற்றபட்டலா, அப்தாப் அவரைக் கொன்று 35 துண்டுகளாக உடலை வெட்டி, டெல்லியின் பல்வேறு இடங்களில் வீசினார்.
இந்த கொலை சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து, மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், டெல்லி ஷ்ரத்தா கொலை உள்ள பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை தான் காரணம். படித்த பெண்களுக்குத்தான் இதுபோல் நடக்கிறது. பெண்கள் உண்மையாகக் காதலித்தால், திருமணம் செய்துகொண்டு வாழுங்கள்- Living together முறையில் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.