நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மக்களவை தேர்தலையொட்டி, உழவர் நீதி, இளைஞர் நீதி, மகளிர் நீதி, உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதில், ஏழை குடும்பத்து பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணிகள் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தது.
மேலும், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுடன் இதர சலுகைகள் தனியார் துறைக்கும் கட்டாயமாக்கப்படும்; தற்போதைய அரசாங்கத்தால் நிறைவேற்ற்றப்பட்ட தொழிலாளர் சட்டவிரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.