ED விசாரணைகளுக்கும், பாஜக பெற்ற நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நிர்மலா சீதாராமன்

Mahendran

சனி, 16 மார்ச் 2024 (09:48 IST)
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கும் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் அதிக நிதி வாங்கியது பாஜகாதான் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை கொண்டு பயமுறுத்தி நிறுவனங்களிடமிருந்து அதிகமாக நிதி வசூல் செய்துள்ளது என பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. 
 
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தனியார் நிறுவனங்கள் நிதி வழங்குவதற்கு தயாராக இருக்கும்போது அதற்கேற்ற சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நிதி அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறுவது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்