திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் ஸ்ட்ரீட் டாக் என்ற பெயரில் புதிதாக துணிக்கடை ஒன்றை துவங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர நினைத்த அவர், திறப்பு விழாவை முன்னிட்டு அதிரடி சலுகைகளை அறிவித்தார். அதன்படி 250 ரூபாய் சட்டையை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்தார். இதனால் அவரது கடையில் கூட்டம் அலைமோதியது.