இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகளிருக்கு வழங்குவதைப் போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பேருந்துகள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும் அப்போதுதான் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துவார்கள். மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டிற்கு 4 ஆயிரம்பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனைத்தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.