பிரபல மாடலும், கவர்ச்சி நடிகையுமான மேக்னா படேல், தேசிய அரசியலில் களமிறங்கப் போவதாக செய்திகள் வெளியானது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இவர் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான நாக்க முக்கா பாடலில் இவர் நடனம் ஆடியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடிக்கு ஆதரவாக, பாஜக சின்னத்தை உடலில் வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
இந்நிலையில், அவர் திடீரென்று தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இனைந்துள்ளார். இதனை அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் உறுதி செய்துள்ளார்.
அனேகமாக, 2017ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.